ஆனந்த முண்டெனக்கானந்தமுண்டு - Aanantha Mundenakkananthamundu
பல்லவி
ஆனந்த முண்டெனக்கானந்தமுண்டு - என்
இயேசு மகாராஜா சந்நிதியில்
சரணங்கள்
1. இந்த புவி ஒரு சொந்தம் அல்ல என்று
இயேசு என் நேசர் மொழிந்தனரே
இக்கட்டுத் துன்பமும் இயேசுவின் தொண்டர்க்கு
இங்கேயே பங்காய்க் கிடைத்திடினும் - ஆனந்தம்
2. கர்த்தாவே நீர் எந்தன் காருண்ய கோட்டையே!
காரணமின்றி கலங்கேனே யான்
விஸ்வாசப் பேழையில் மேலோகம் வந்திட
மேவியே சுக்கான் பிடித்திடுமே! - ஆனந்தம்
3. என் உள்ளமே உன்னில் சஞ்சலம் ஏன் வீணாய்?
கண்ணீரின் பள்ளத்தாக்கல்லோ இது;
சீயோன் நகரத்தில் சீக்கிரம் சென்று நாம்
ஜெயகீதம் பாடி மகிழ்ந்திடலாம்! - ஆனந்தம்
4. கூடாரவாசிகளாகும் நமக்கிங்கு
வீடென்றும், நாடென்றும் சொல்லலாமோ?
கை வேலையல்லாத வீடொன்றை மேலே நான்
செய்வேன் என்று இயேசு போகலையோ? - ஆனந்தம்
5. துன்பங்கள், தொல்லை, இடுக்கண், இடர், இவை
தொண்டர் எமை அண்டி வந்திடினும்
சொல்லி முடியாத ஆறுதல் கிருபையை
துன்பத்தினூடே அனுப்பிடுவார்! - ஆனந்தம்
6. இயேசுவே சீக்கிரம் இத்தரை வாருமேன்!
ஏழை வெகுவாய் கலங்குறேனே;
என் நேசர் தன்முக ஜோதியே யல்லாமல்
இன்பம் தரும் பொருள் ஏதுமில்லை - ஆனந்தம்
Aanantha Mundenakkananthamundu - En
Yesu MahaRajaa sannithiyil
1.Intha puvi Oru sontham Alla Entru
Yesu En Neasar Mozhinthanarae
Ekkattu Thunbamum Yesuvin Thondarkku
Engayae Pankaai Kidaithidinum - Aanantham
2.Karthavae Neer Enthan Kaarunya Kottaiyae
Kaaranamintri Kalangenae Yaan
Viswasa pealaiyil Mealogam Vanthida
Meaviyae Sukkaan Pidithiduvom- Aanantham
3.En Ullamae Unnil Sanjalam Yean Veenaai
Kanneerin Pallathakkallo Ithu
Seeyon Nagaraththil Seekkiram Sentru Naam
Jeya Geetham Paadi Magilnthidalam- Aanantham
4.Koodaravaasikalaagum Namakkingu
Veedentrum Nadentrum Sollalaamo
Kai Vealaiyallaatha Veedontrai Mealae Naan
Seivean Entru Yesu Pogalaiyo-Aanantham
5.Thunbangal Thollai Idukkan Idar Ivai
Thondar Emai Andi vanthidinum
Solli mudiyatha Aruthal Kirubaiyai
Thunbaththinodae Anuppiduvaar-Aanantham
6.Yesuvae seekkiram Itharai Vaarumean
Yealai veguvaai Kalangureane
En Neasar Than muga jothiyae yallaamal
Inbam Tharum Porul Yethumillai-Aanantham