ஊரெல்லாம் மேளச்சத்தம் - Oorellam Mela Satham

 ஊரெல்லாம் மேளச்சத்தம் - Oorellam Mela Satham

 

மக்களுக்கெல்லாம் மகிழ்ச்சியான செய்தி ஒன்னு சொல்லப்போறேன்

வான தூதர் வாழ்த்துரைக்க 

வையமெல்லாம் வாழ்வு  பெற 

இடையர்கள் கூடிவர 

ஞானிகள் தேடிவர 

மாட்டுக்கொட்டகையில் 

சூசை மாரி மத்தியிலே 

விண்ணுக்கும் மண்ணுக்கும் 

ராசாவா ..

நம்ம இயேசு சாமி 

பொறந்தாரு -2 - ஏலேலோ 


ஊரெல்லாம் மேளச்சத்தம்

பாரெல்லாம் பாட்டுச்சத்தம் 2 - ஏலேலோ


குயிலெல்லாம் பட்டுப்பாடும்

மயிலெல்லாம் ஆட்டமாடும் 

குடிசையில் கொளவச்சத்தம் 

கோவிலெல்லாம் மக்கள் கூட்டம் 

பங்காளி சண்டை இல்லை 

பாசம்தான் எங்க எல்ல 

பூலோகம் மாட்சி பெற 

மனுசனா மண்ணில் பிறந்தாரையா -2


மன்னாதி மன்னவரு 

மனசெல்லாம் நின்னவரு 

சிங்கார பாலகனா 

சிங்கம் போல பொறந்தாரு -2

மார்கழி இரவில் குளிரினிலே 

மாமரி மகனாய் வந்துதித்தார் 

மாடுகள் ஆடையும் தொழுவதிலே 

மனிதருள் மாணிக்கம் பிறந்தாரே -2


பூமியில் நல்மனம் கொண்டவர்கள் 

நெஞ்சினில் அமைதியை விதைத்திடவே 

அமைதியின் தேவன் அவனியிலே 

அழகிய குழந்தையாய் பிறந்தாரே 

மகிழ்ச்சியின் பாடல் பாடிடுவோம் 

மனிதருள் மாணிக்கம் பிறந்தாரே 


வறுமை ஒழியனும் 

வாழ்க மாறணும் 

தேவனின் மகிமையை 

தினமும் பார்க்கணும் 

புகழ் தேடி அலையும்  உலகத்திலே 

பொதுவுடைமை சித்தாந்தம் சொன்னவாறு 

பல கோடி உள்ளங்கள் மீட்படைய 

பகலவனை போல உதிச்சாரு -2


ஏழ்மை  வறுமையும் ஒழித்திடவே 

எல்லாருக்கும் எல்லாமாய் இருந்தாரே 

உங்க திருமுகத்தை தினமும் பார்க்கணுமே 

உங்க குரலை தினமும் கேட்கணுமே 

விண்ணில் மகிமை இறைவனுக்கே 

மண்ணில் அமைதி மனிதருக்கே 



Makkalukellam Magilchiyana seithi onnu sollaporean

Vaana thuthar Vaalthuraikka

Vaiyamellam Vaaluv pera 

Idayarkal Koodivara

Gnanikal Theadivara

Maattukottakaiyil 

Soosai Mari Maththiyilae 

Vinnukkum Mannukkum 

Rasaava 

Namma Yesu Saami

porantharu  -2 - Yelelo 


Oorellam Mela Satham

Paarellam Paattu satham -2 - Yelelo 


Kuilellaam pattupaadum

Mailellaam Aattamaadum


Kudisaiyila Kolava satham 

Kovilellam Makkal Koottam 

Pangali sandai illai

Paasamthaan enga Ella 

Poologam maatchi pera 

Manusana mannil pirantharaiya - 2


Mannathi Mannavaru

Manasellam Ninnavaru

singara paalagana

singam pola porantharu -2

Margali Iravil Kulirinilae 

Mamari Maganaai Vanthuthithaar 

Maadukal Aadaiyum Thozhuvathilae 

Manitharul Maanikkam Pirantharae -2


Boomiyil Nalmanam kondavarkal

Nenjinil Amaithiyai Vithaithidave 

Amaithiyin Devan Avaniyilae

Aazhakiya kulanthaiyaai Piranthaare 

Magilchiyin Paadal paadiduvom

Magala keethangal mulangiduvom 



Varumai Oziyanaum

Vaalka maaranaum

Devanin Magimaiyai

Dhinamum Paarkanum

Pugal Theadi Alaiyum Ulagathilae

Pothuvudamai siththantham sonnavaru

Pala kooadi ullangal meetpadaya 

pagalavanai pola uthicharu - 2


Yealamiyum Varumaiyum Ozithidavae

Ellarukkum Ellaamaai Irunthaarae

Unga Thirumugathai Thinamum Paarkanumae

Unga kurala Thinamum Keatkanumae

Vinnil Magimai Iraivanukae 

Mannil Amaithi Manitharukae







Post a Comment (0)
Previous Post Next Post