மகிழ்வான அன்பு திருநாள் - Mahilvaana Anbu Thirunaal
மகிழ்வான அன்பு திருநாள் மனம் துள்ளும் இன்ப திருநாள்
என் தேவன் பிள்ளை வடிவில் பிறந்தாரே -2
பிறந்தார் பிறந்தார் பிறந்தார் ஏழை குடிலில் பிறந்தார்
அழகாய் அன்னை அன்பின் அணைப்பில்
பூவின் வடிவிலே
கொண்டாட்டம் போடுவோம் பண்பாடி ஆடுவோம்
அன்பாலே இதயம் இணையும் நல்ல நாளிதே -2
மகிழ்வான அன்பு திருநாள் மனம் துள்ளும் இன்ப திருநாள்
என் தேவன் பிள்ளை வடிவில் பிறந்தாரே -2
விண்ணில் தோன்றும் தாரகைகள் மண்ணில் மின்னும் திருநாள்
கண்ணில் மின்னும் வெளிச்சம் ஆனந்த நந்தமே
சின்ன பிள்ளைபோல துள்ளும் வன்னதிருநாள்
உலகம் இன்று தன்னை அழகாக்கி கொண்டதே
கந்தைக்குள் காவியம் வைக்கோலில் வானகம்
சிந்தைக்குள் சந்தோசம் துள்ளி ஆடுதே -2
மகிழ்வான அன்பு திருநாள் மனம் துள்ளும் இன்ப திருநாள்
என் தேவன் பிள்ளை வடிவில் பிறந்தாரே -2
இருளின் கதவை திறந்தால் ஒளியின் வருகை அழகே
அருளின் கதவை திறந்துகொண்டு புனிதம் பூத்ததே
மனதின் கதவை திறந்தால் மகிழ்வின் உவகை மலரே
கனவை மீறி நினைவில் ஒரு தெய்வம் சிரித்ததே
தொழுவத்தில் தெய்வதம் ஆயணிந்த ஆதவன்
தூயணிந்த பாலகன் மீட்க வந்தாரே -2
மகிழ்வான அன்பு திருநாள் மனம் துள்ளும் இன்ப திருநாள்
என் தேவன் பிள்ளை வடிவில் பிறந்தாரே -2
பிறந்தார் பிறந்தார் பிறந்தார் ஏழை குடிலில் பிறந்தார்
அழகாய் அன்னை அன்பின் அணைப்பில்
பூவின் வடிவிலே
கொண்டாட்டம் போடுவோம் பண்பாடி ஆடுவோம்
அன்பாலே இதயம் இணையும் நல்ல நாளிதே -2
Lyrics
Mahilvaana Anbu Thirunaal Manam Thullum Inba thirunaal
En Devan Pillai Vadivil Piranthare -2
Piranthar Pirinthar Piranthar Yelai Kudilil Piranthar
Azahagai Annai Anbin Anaipil
Poovin Vadivile
Kondattam Poduvom Panpaadi Aaduvom
Anbale idhayam inayum Nalla Naalithe -2
Mahilvaana Anbu Thirunaal Manam Thullum Inba thirunaal
En Devan Pillai Vadivil Piranthare -2
Vinnil Thondrum Tharagaigal Mannil Minnum Thirunaal
Kannil Minnum Velicham Aanandha Nanthame
Chinna Pillai Pole Thullum Vanna Thirunaal.
Ulagam Indru Thannai Azhagakki kondathe
Kanthaikul Kaaviyam Vaikolil Vaanagam
Sinthaikul Santhosam Thulli Aaduthe -2
Mahilvaana Anbu Thirunaal Manam Thullum Inba thirunaal
En Devan Pillai Vadivil Piranthare
Irulin Kathavai thiranthal oliyin varugai azhage
Arulin Kathavai Thiranthu kondu Punitham poothathey
Manathin kathavai thiranthal mahilvin uvagai malare
Kanavai meeri ninaivil Oru Deivam sirithathey
Tholuvathil deivatham Aayanintha aathavan
Thooyanintha paalagan Meetka vanthare -2