யுத்தங்கள் மேற்கொள்ளும்போது - Yuththangal Mearkollumpothu
A# Maj
யுத்தங்கள் மேற்கொள்ளும்போது
எங்கள் ஜெயம் நீர்
நான் கண்டு அஞ்சும் அலைகள்
உம் சத்தம் கேட்டு அகன்றிடும்
இருளான பாதைகள் எல்லாம்
உம் அன்பு தாங்கும்
நான் என்றும் அஞ்சிட மாட்டேன்
உந்தன் கிருபை தாங்குவதால்
முழங்காலில் யுத்தம் செய்திடுவேன்
கைகள் உயர்த்தி தினம் பாடுவேன்
யுத்தம் உம்முடையதே
உந்தனின் பாதத்தில் வைத்திடுவேன்
எந்தன் பயம் எல்லாம்
யுத்தம் உம்முடையதே
என் பக்கம் நீர் நிற்கும் போது
யார் நிற்க கூடும் எனக்கெதிராக....
ஆகாதது ஒன்றுமில்லையே
என் இயேசுவே உம்மால்....
சாம்பலை சிங்காரமாக்கும்
வல்லவர் நீரே இயேசுவே....
என்றென்றும் வாழ்பவர் நீரே
மரணத்தை வென்றவரே-முழங்காலில்
என் முன்னே செல்லும்
என் வல்ல கோட்டை
உமக்கு நிகர் ஏதும் எவரும் இல்லையே
ஓ..யுத்தங்கள் வெல்லும்
எங்கள் மகிமையின் வெளிச்சம்
உமக்கு நிகர் ஏதும் எவரும் இல்லையே-3
முழங்காலில் யுத்தம் செய்திடுவேன்
கைகள் உயர்த்தி தினம் பாடுவேன்
யுத்தம் உம்முடையதே
உந்தனின் பாதத்தில் வைத்திடுவேன்
எந்தன் பயம் எல்லாம்
யுத்தம் உம்முடையதே