யார் இவர் ஆரோ? யார் இவர் - Yaar Evar Aaro Yaar Evar

 யார் இவர் ஆரோ? யார் இவர் - Yaar Evar Aaro Yaar Evar


யார் இவர் ஆரோ? யார் இவர் ஆரோ? 

யார் இவர்? பரன் வார்த்தை மாமிசம்

ஆயினர் இவரோ?


சரணங்கள்


1.ஈர் ஐந்து குணம் இல்லாதோர் போல,

பாரினில் ஓர் எளிய கன்னிகையின்

பாலர் ஆனாரோ?


2. ஊரில் ஓர் இடமும் 'உகந்திட இல்லையோ? 

சீர் அல்லாக் குடியில் பிறந்தார் அதி

சயம் ஆனவரோ?


3.கர்த்தத்துவமோ காணுது தோள் மேல்; 

சுற்றிவைக்கப் பழந்துணியோ? இவர் 

தூங்கப் புல் அணையோ?


4. சேனைத் தூதர், இதோ! சிறப்புடன் பாட, 

கானகக் ‘கோனர் காணவர, இவர் 

கர்த்தர் ஆவாரோ?


5. முந்து தீர்க்கர் பிதா மொழிந்த தெதிர் பார்த்த 

சொந்தமான ஜனம் இஸ்ரவேலின் 

சூரியன் இவரோ? 


6.பாவியான என்மேல் பட்சமே மிகவாய் 

ஜீவனைக் கொடுக்கப் பிறந்த என்றன் 

ஜீவ நாயகரோ?


Yaar Evar Aaro  Yaar Evar Aaro 

Yaar Evar Paran vaarththai Mamisam

Aayinaar Evaro


1.Eeer Ainthu Gunam Illathor pola

Paarinil Oor yealiya Kannikaiyin

Paalar Aanaaro


2.Ooril Oor Idamum Uganthida Illaiyo

Seer Allaa kudiyil Piranthaar Athi

sayam Aanavaro


3.karthathuvamo Kanuthu Thozh Meal

Suttrivaikka Palanthuniyo Evar

Thoonga Pul Anaiyo


4.Seanai Thuthar Itho Sirappudan Paada

Kaanaka Konar Kaanavar Evar

Karthar Aavaaro


5. Munthu Theerkkar Pitha Mozhintha Theathir Paartha

Sonthamaana Janam Isravealin

Sooriyan Evaro


6.Paaviyaana En Meal Patchamae Migavaai

Jeevanai Kodukka Pirakka Entran

Jeeva Nayakaro 






Post a Comment (0)
Previous Post Next Post