உதித்ததே பாராய் வெளிச்சந்தான் - Uthiththathe Paaraai Velichanthaan

 உதித்ததே பாராய்  வெளிச்சந்தான் - Uthiththathe Paaraai Velichanthaan


பல்லவி


உதித்ததே பாராய் – வெளிச்சந்தான்

உலகத்தின் ஒளியாய்


அனுபல்லவி


உதித்ததே உலகினி லோப்பற்ற பேரொளி,

அதிசயப் பிரபையை அற்புதமாய் வீசி


சரணங்கள்


1. இதயத்தி லிருண்டு – குளிர் மிகக்

கதித்துமே மருண்டு,

மதிகெட்டு வழி விட்டு மருளுக்குள்ளகப்பட்டு

கதியற்ற பாவிகட்குக் கதிர்விட்டு சுடர் விட்டு – உதி


2. பரனடி மறந்து – தமக்குள்

உரிமையைத் துறந்து,

மரண இருளில் மயங்கித் திரிவோர்க்கு

அருணோதயம் போலனாதிச் சுடரொளி – உதி


3. திரிவினை தீர – இயேசையன்

திருப் பாலனாக

மருள கன்றிருள் மாய மன்னன் தாவீ திறை

வரிசையின் வேர், விடிவெள்ளி நட்சத்திரம் – உதி


4. அகம் பிணி யுடைய ஆத்துமாக்க

ளாரோக்ய மடைய

தகனிக்கு மக்கினி தகதக வென்று தன்

ததியோடு கதிர் வீசியே நீதிச் சூரியன் – உதி


5. வெளிச்சத்தில் நடப்பா ரிடறியே,

விழுந்துமே போகார்!

வளரும் பக்தி, விசுவாசம், பரிசுத்தம்,

அளவற்ற கிறிஸ்தேசு அண்ணலா மாதித்தன் – உதி


Uthiththathe Paaraai Velichanthaan

Ulagathin Oliyaai


Uthiththathe Ulaginilae Loppattra pearoli

Athisaya Pirappai Arputhamaai Veesi


1.Idhayathilirundu Kulir miga

kathithumae Marundu

Mathi kettu vazhi vittu Marulakullaga pattu

Kathiyattra paavikatkku kathir vittu sudar vittu


2.Paranadi Maranthu Thamakkul

urimaiyai Thuranthu

Marana Irulil Mayangi Thirivorkku

Arunodhayam Polanaathi Sudaroli


3.Thirivinai Theera yeasaiyan

Thiru Paalanaga

Marula Kantrirul Maaya Mannan Thaavithirai

Varisaiyin Vear Vidivelli Natchathiram


4.Agam Piniyudaya Aaththumakka

Aanaarokkya Madaya Thafanikku

Makkini Thagathaga ventru Than

Thuthiyodu Kathir Veesiyae Neethi sooriyan


5.Velichathil Nadapparidariyae

Vilunthumae pokaar

Valarum Bakthi Visuvaasam Parisuththam

Alavattra Kiristhesu Annala Mathiththan 



Post a Comment (0)
Previous Post Next Post