மனமே ஓ! உன்னதம் மறை தந்தவனே - Manamae Oh Unnatham Marai Thanthavanae
பல்லவி
மனமே ஓ! உன்னதம் மறை தந்தவனே வந்தனர்
அனுபல்லவி
கன மிகுந்த திருக் குமாரன் கருணையாய் நரர் உருவமாகினார்.
சரணங்கள்
1.ஆதி சர்ப்பத்தின் தலையை உ டைக்க
அகிலத்தின் பவமனைத்தும் துடைக்க
வேத மறையினூடு சிறந்த மேசியா பிறந்தார்.
2. ஆ! கனமிகும் மகிமைத் தேவனார்
யாவருக்கும் அருள்செய மேவினார்
ஏக முதல்வனாம் ஓரு வஸ்து இயேசு ராஜ கிறிஸ்து.
3. நானிலத்தில் நரர் பிழைக்கவே
ஞான நன்மைகளே தழைக்கவே
வான ராட்சியம் சேர்ந்து வந்தது மானுவேல் பிறந்தார்.
4. நாம் நடத்தியபடி செய்யாமல்
நம்முட மேல் உக்கிரம் வையாமல்
ஆ மகத்துவமே கதித்த அனாதியார் உதித்தார்.
5. நாதனார் மனுவாய் வந்திருக்க
வேதநாயகன் பதங்கள் பெருக்க
நமக்கிப் போது கவலையேது நாம கீர்த்தன மோது.
Manamae Oh Unnatham Marai Thanthavanae Vanthanar
Kana Miguntha Thiru Kumaaran Karunaiyaai Naraar Uruvamaginaar
1.Aathi sarpaththin Thalaiyai Udaikka
Agilaththin Pavamanaithum Thudaikka
Vedha Maraiyinoodu Sirantha Measia piranthaar
2.Ah! Kan migum Magimai Devanaar
Yavarukum Arul seiya meavinaar
Yega Muthalvanaam Oru vasthu Yesu Raja Kirsithu
3.Gnanilaththil Narar Pilaikkavae
Gnana Nanmaigalae Thalaikkavae
Vaana Ratchiyam searnthu vanthathu manuvel piranthaar
4.Naam nadathiyapadi Seiyaamal
Nammuda Meal Ukkiram Vaiyamai
Ah! Magathuvame Kathitha Anaathiyaar Uthithaar
5.Naathanaar Manuvaai Vanthirukka
Vedha naayagan Pathangal Perukka
Namakku Ippothu Kavalaiyeathu Naama Keerthana Moothu