Yela Yelo Yeasaiah - ஏல ஏலோ இயேசையா
பல்லவி
ஏல ஏலோ ஏல ஏலோ, இயேசையா
ஏல ஏலோ இயேசையா
சரணங்கள்
அறுத்து வந்தோம் நெற்பயிரை – இயேசையா
அழைத்து வந்தோம் சேனையாரை;
காலை முதல் மாலை வரை – இயேசையா
கடினமாக வேலை செய்தோம்
மாரியிலும் கோடையிலும் – இயேசையா
மட்டில்லாத வருத்தத்துடன்,
தேவன் தந்த நஞ்சை நிலத்தை,
சமமாக வெட்டி ஏர்களுமுழுது,
கல்லுகள் முள்ளுகள், பூண்டுகள் நீக்கி
இல்லாமல் ஒன்றேனும் பண்படுத்தினோம்,
வெள்ளமும் விட்டு விதையும் விதைத்து,
களையும் பறித்து நெற்பயிராக்கி,
நாலு பக்கமும் வேலியடைத்து,
நாற்கால் மிருகங்கள் வராதபடி,
காவலுங் காத்தோம் ஏழைகள் நாங்கள்
தானியம் முற்றி அறுத்துப் போர் செய்து
கர்த்தருக்குக் காணிக்கை கொண்டுவந்தோமே
பல்லவி
சேர்ந்தோமையா ஒற்றுமையாய் – இயேசையா
சேனையிலே வீரராக
சரணங்கள்
கட்டையன், நெட்டையன், காடைக்கழுத்தன்,
கருமிளகு, செம்மிளகு, காற்றாடிமுண்டன்;
கட்டுக்கருமின்னான், கருப்புக்காலி விரியன்;
கருங்குருவை, கல்லுண்டான், காடுதாவிகாரி,
தட்டார வெள்ளை, செம்பமார்த்தாண்டன்,
சடையாரி சிறுயீர்க்குச் சம்பா, சீரழகி,
சுட்டி விரியன், சித்திரைக்காலி,
சிறு சுண்டான், மணல்வாரி, சீரகச் சம்பா,
பொட்டல் விளையும் புழுதி புரட்டி,
புனுகு சம்பா, கடும்பாறை பிளப்பான்,
குட்டைக் குறுவை, குளக்குறுவை, தெர்ப்பை,
குற்றாலன் மைக்குறுவை குளவெள்ளை, குனிப்பான்
கட்டிச் சம்பா வெள்ளை கனகமத்து சம்பா
கல்லன்சம்பா, ஆனைக்கொம்பன், குறுவை,
வெட்டையில் முட்டி மொட்டைக் குறுவை,
வீரியடங்கான், வாசிறமிண்டான்;
குட்டநாடுமயில், குலமறியன்சார,
கோடனாரியன் முட்டகன் செந்நெல்,
கட்டி வெள்ளைப் பூதகாளி கருப்பன்,
காடன், வயல் தூவ கண்ணன் ஞாவுரா,
திட்டமுடன் அரிக்கிராவி, முதலான நெல்லுகள்
தென்னிந்தியாவெங்கும் சீராய் விளைந்து
பட்சமுடன் இரட்சணிய சேனையார் வந்து
கூடவும், பாடவும், தேவனைப் போற்றவும் – சேர்
Harvest Festival song - அறுப்புப் பண்டிகை பாடல்
அப்பொழுது நீ நிலத்தில் விதைக்கும் உன் விதைக்கு அவர் மழையையும், நிலத்தின் பலனாகிய ஆகாரத்தையும் தருவார்; அது கொழுமையும் புஷ்டியுமாய் இருக்கும்; அக்காலத்திலே உன் ஆடுமாடுகள் விஸ்தாரமான மேய்ச்சலுள்ள ஸ்தலத்திலே மேயும்;
Then shall he give the rain of thy seed, that thou shalt sow the ground withal; and bread of the increase of the earth, and it shall be fat and plenteous: in that day shall thy cattle feed in large pastures.
ஏசாயா | Isaiah | 30:23