செல்லுவோம் வாரீர் - selluvom vareer
செல்லுவோம் வாரீர்! சிலுவையடியில்
1.சொல்லரிய நாதன் - சுய சோரி சிந்தி
அல்லற்படுகின்ற - ஆகலத்தைப் பார்க்க - செல்
2.ஒண்முடி மன்னனார் -முண்முடிதரித்து
கண்மயங்கித் தொங்கும் - காட்சியைப் பார்க்க - செல்
3.மூங்கில் தடியாலே - ஓங்கியே அடிக்க
ஏங்கியே தவித்த - இயேசையனைப் பார்க்க - செல்
4.சத்துருவின் கையில் - உற்ற ஆட்டை மீட்க
மெத்தப் பாடுபட்ட - நல்மேய்ப்பனைக் காண - செல்
5.கிருபாசனத்தில்- குருதியோடு சென்ற
அருமைப் பிரதான - ஆசாரியனைப் பார்க்க - செல்
6.பாவவினைபோக - தேவ தயவாக
ஜீவ பலியான - இயேசையனைப் பார்க்க - செல்
7.நித்திய சாவின் கூரை - பக்தி தேகத்தேற்று
வெற்றிபெற்ற இயேசு - மேசியாவைப் பார்க்க - செல்
8.கடனாளிகட்குப் - பிணையாளியாக
உடலுயி ரீந்த - உன்னதனைப் பார்க்க - செல்
9.பிடித்து உதைத்து - இடித்து வதைத்து
அடிக்கப்படும் நல் - ஆட்டுக்குட்டியைப் பார்க்க - செல்
selluvom vareer Siluvaiyadiyil
Sollariya Naathan - Suya soori sinthi
Allarpadukintra - Aagalathai Paarkka
Oonmudi Mannanaar - Mun mudi thirithu
Kanmayangi Thongum - kaatchiyai paarkka
Moongil Thadiyalae - Oongiyae Adikka
Yeangiyae Thavitha - Yeasaiyanai Paarkka
Sathruvin kaiyil - Uttra Aatta Meetkka
Meththa Paadupatta - Nal meippanai Kaana
Kirubasanaththil - Kuruthiyodu sentra
Arumai Pirathana - Aasariyanai Paarkka
Paava vinai poga - Deva Dayavaaga
Jeeva paliyaana - Yeasaiyanai paarkka
Nithiya saavin koorai - Bakthi Degathettru
Vettri pettra Yesu - Measiyaavai paarkka
Kadanaalikatku - Pinaiyaaliyaaga
Udaluyirntha - Unnathanai paarkka
Pidithu udaithu - idithu vathaithu
Adikapadum Nal - Aattukuttiyai paarkka