புது கிருபைகள் தினம் - Pudhu Kirubaigal dhinam

 புது கிருபைகள் தினம் -  Pudhu Kirubaigal dhinam


புது கிருபைகள் தினம் தினம் தந்து

என்னை நடத்தி செல்பவரே

அனுதினமும் உம் கரம் நீட்டி

என்னை ஆசீர்வதிப்பவரே –2


என் இயேசுவே உம்மை சொந்தமாக

கொண்டதென் பாக்கியமே

இதை விடவும் பெரிதான

மேன்மை ஒன்றும் இல்லையே –2


1.நேர் வழியாய் என்னை நடத்தினீர்

நீதியின் பாதையில் நடத்தினீர் –2

காரியம் வாய்க்க செய்தீர்

என்னை கண்மணி போல காத்திடீர் –2 என் இயேசுவே


2.பாதங்கள் சறுக்கின வேளையில்

பதறாத கரம் நீட்டி தாங்கினீர் –2

பாரமெல்லாம் நீக்கினீர்

என்னை பாடி மகிழ வைத்தீர் –2 என் இயேசுவே





Post a Comment (0)
Previous Post Next Post