மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு - Manavazhvu Puvi Vazhvinil Vazhvu
மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு – மங்கள வாழ்வு
வாழ்வினில் வாழ்வு
மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு
மருவிய சோபன சுப வாழ்வு
1.துணை பிரியாது, தோகையிம்மாது
துப மண மகளிவர் இதுபோது
மனமுறை யோது வசனம் விடாது
வந்தன ருமதருள் பெறவேது – நல்ல - மண
2.ஜீவ தயாகரா, சிருஷ்டியதிகாரா
தெய்வீக மாமண வலங்காரா
தேவகுமாரா, திருவெல்லையூரா
சேர்ந்தவர்க்கருள் தரா திருப்பீரா? – நல்ல - மண
3.குடித்தன வீரம் குணமுள்ள தாரம்
கொடுத்துக் கொண்டாலது சமுசாரம்
அடக்கமாசாரம் அன்பு, உதாரம்
அம்புவிதனில் மனைக்கலங்காரம் – நல்ல - மண
4.மன்றல் செய் தேவி, மணாளனுக்காவி
மந்திரம் அவர்குறை மேதாவி
மன்றியிப் பூவி லமிர்த சஞ்சீவி
அவளையில்லாதவ னொரு பாவி - நல்ல - மண
Manavazhvu Puvi Vazhvinil Vazhvu
Mangala Vaazhvu Vazhvinil Vazhvu
Manavazhvu Puvi Vazhvinil Vazhvu
Maruviya Shobana Subhavaazhvu
1.Thunai Piriyadhu Thogaiyimmadhu
Subha mana Magalivar Idhupodhu
Mana Murai Yodhu Vasanam Vidadhu
Vandhana Rumatharul Peravedhu -Nalla
2.Jeeva thayagara Sirusdiyathigara
Deiveega Maamana Alangaara
Devekumaara Thiruvellaiyuraa
Serndhavarkkarul Thaaraa Thirupeeraa-Nalla
3.Kudiththana Veeraa Gunamulla Thaaram
Koduththu kondaladhu samusaaram
Adakkamasaaram anbu udharam
Ampuvi thanil manaikkalangaaram -Nalla
4. Mantral Sei Devi, Manaalunakkaavi
Manthiram Aavar kurai Meadhavi
Mantriyi Poovilamarntha Sanjeevi
Avalaiyillaathava noru paavi -Nalla