Azhagullavar Adhisayarae - அழகுள்ளவர் அதிசயரே

 Azhagullavar Adhisayarae - அழகுள்ளவர் அதிசயரே


அழகுள்ளவர் அதிசயரே

உம் மேல் நான் சாய்ந்திடுவேன் தேவா-2

வழிகள் அடைத்த நேரம்

வந்தீரே நல்ல நண்பனாய்

தள்ளிடாமல் கைவிடாமல்

தந்தீரே மாறா உம் அன்பை


அணைத்திடும் என் நல்ல தேவா

காத்திடும் தேவை நிறைவேற்றும்

தாங்கிடும் எந்தன் வேதனையில்

காவலாய் என்றும் கூட இருப்பீர்-2


எந்தன் ஜெபம் கேட்டு

அருகினில் ஓடி வந்து

கண்ணீர் எல்லாம் துடைத்தவரே-2

என்றும் உம்மோடு நடந்திடவே தான்

உள்ளம் துடிக்கும் என் இயேசு தேவா-2-அணைத்திடும்


என் மேல் இவ்வளவாய் அன்பு வைத்திருக்கும்

உம்மை விட்டு நான் எங்கு போவேன்

இம்மட்டும் என்னை அழியாமல் காத்த

உம்மை நான் எப்படி மறப்பேன் தேவா?-2-அணைத்திடும்





Post a Comment (0)
Previous Post Next Post