ஆவலாய் மீட்பரண்டை வா - Aavalaai Meetparandai Vaa

 ஆவலாய் மீட்பரண்டை வா - Aavalaai Meetparandai Vaa


பல்லவி


ஆவலாய் மீட்பரண்டை வா - நீ வா - நீ வா


சரணங்கள்


1. இரட்சகர் தானமதாம் - இரட்சை நீ சொந்தமாக்க

விரைவுடன் இயேசு பாதம் வா - நீ வா - நீ வா! - ஆவலாய்


2. எத்தனை நாளாக நீ எத்தனை இகழுவாய்?

கர்த்தர் அழைக்கும் சத்தம் கேள் - நீ கேள் - நீ கேள் - ஆவலாய்


3. பாவத்தாலழுந்தும் உன் பாவம் நீக்குவேன் என்ற

காவலன் பாதத்தை நீ சேர் - நீ சேர் - நீ சேர் - ஆவலாய்


4. லோகம், ஜடம், பிசாசும் ஆகுலமியற்றினும்

சோகமற நல்லாயனைப் பார் - நீ பார் - நீ பார் - ஆவலாய்


5. உன்னைத் தானே வெறுத்து உன் சிலுவை எடுத்து

உன்னதனருள் நம்பி வா - நீ வா - நீ வா - ஆவலாய்


6. பாவமன்னிப்புச் சமாதானமும் பரிசுத்தமும்

தேவனுறை மோக்ஷமும் நினை - நினை - நினை - ஆவலாய்


7. மனஸ்தாபம் விசுவாசம் தள்ளுதலாம் மூன்றும்

மனுஷர் இரட்சைக்கு வழி காண் - நீ காண் - நீ காண்! - ஆவலாய்


Aavalaai Meetparandai Vaa - Nee Vaa - Nee Vaa


Ratchakar Thaanamathaam - Ratchai Nee Sonthamaakka

Viraiuvdan yesu Paatham Vaa - Nee Vaa - Nee Vaa


Eththanai Naalaga Nee Eththanai Egaluvaai

Karthar Azaikkum Saththam Keal - Nee Keal Nee Keal


Paavaththaal Alunthum Un Paavam Neekkuvean Entra

Kaavalan Paathathai Nee Saer Nee Saer Nee Sear


Logam, Jadam, Pisasum Aagulamiyattinum

Sogamara Nallaayanai Paar Nee paar Nee paar


Unnai thaanae Veruththu Un siluvaiyai Eduththu

Unnatharul Nambi Vaa - Nee nambi vaa


Paava mannippu Samathaanamum Parisuththamum

Devanurai Moshamum Ninai ninai ninai


Manasthaapam Visuvaasam Thalluthalaam Moontrum

Manushar Ratchaikku vazhi Kaan Nee Kaan Nee Kaan



Post a Comment (0)
Previous Post Next Post