ஆரிவராரோ இயேசு ஆரிவராரோ - Aarivaraaro Yesu Aarivaraaro

 ஆரிவராரோ இயேசு ஆரிவராரோ - Aarivaraaro Yesu Aarivaraaro


ஆரிவராரோ? இயேசு ஆரிவராரோ?


1. மாட்டகத்தில் பிறந்தவரோ?

மந்தை ஆயர் பணிந்தவரோ!

நாட்டுக்கு நன்மை வர

நாதனா யுதித்தவரோ? - ஆரிவ


2. தீர்க்கத்தரிசிகள் முன்

திடனாயுரைத்தவரோ?

ஆர்க்கும் உரிமையுள்ள

அன்பான தங்கமிவர்! - ஆரிவ


3. வானத்தின் நட்சத்திரம்

வழி நடத்தும் சாஸ்திரிகள்

தானாயெழுந்து வந்து

தாழ் பணிந்த கிறிஸ்திவரோ? - ஆரிவ


4. அலகைத் தலை நசுக்க

அவனிதனில் வந்தவரோ!

உலகை உயிர் கொடுத்து

உன்னதத்துக் கிழுத்தவரோ! - ஆரிவ


Aarivaraaro Yesu Aarivaraaro


Maattakathil Piranthavaro

Manthai Aayar Paninthavaro

Naattukku Nanmai Vara

Naathanaai Uthithavaro - Aariva


Theerka dharisikal Mun

Dhidanaai Uraithavaro

Aarkkum Urimaiulla

Anbanaa Thangamivar - Aariva


Vaanathin Natchathiram

Vazhi Nadathum Sasthirikal

Thaanai Elunthu Vanthu

Thazhk Panintha Kiristhivaro - Aariva


Alagai Thalai Nasukka

Avanithanil Vanthavaro

Ulagai Uyir Koduthu

Unnathathuku Eluthavaro - Aariva





Post a Comment (0)
Previous Post Next Post